திங்கள், 7 மே, 2018

பழங்கள் திண்ணும் நீரிழிவு நோயாளிகளுக்கு , நீரிழிவு முற்றி அதனால் கீட்டோ அசிடோசிஸ் நிகழ்ந்து மரணம் சம்பவிக்கும்.

பழங்கள் தின்றாலும் சர்க்கரை கூடவே செய்யும்..

இந்த அடிப்படை அறிவை நீரிழிவு வந்த யாரும் சோதிக்க முடியும்.

உங்கள் நீரிழிவு மாத்திரைகளை ஒருநாள் முழுவதும் நிறுத்திவிட்டு ஒரு மாம்பழம் சாப்பிட்டுவிட்டு உங்கள் ரத்த சர்க்கரை அளவை சோதித்து பாரும்..

உங்களுக்கு அதை சோதித்து உண்மையை அறிந்து பிறகு பரப்பவும்.

தீர ஆராய்வது உங்கள் பொறுப்பு..

- Dr.ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை

Source - https://bit.ly/2JX0ouz

ஞாயிறு, 6 மே, 2018

வாட்ஸ்அப் அட்மின்கள் கைது செய்யப்படுவது ஏன்?

கடந்த இரண்டு வருடங்களாகவே 'வாட்ஸ்அப் அட்மின் கைது' என்பது போன்ற செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில் காணலாம். 

அப்படிக் கைதாகும் பெரும்பாலான அட்மின்களின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, அவர்களின் க்ரூப்களில் தவறான தகவல்கள் பரவியது என்பதுதான். 

அவ்வப்போது வரும் இதுபோன்ற செய்திகள் பெரும் சலனத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இன்று வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் அனைவருமே கவனிப்பதற்கு இதில் ஒரு விஷயம் உண்டு. 

ஒரு அட்மின் கைதாவதற்கு அவரே பொய்யான தகவல்களை, சட்ட விரோத தகவல்களைப் பரப்பவேண்டும் என்பதில்லை. 

அவரின் க்ரூப்பில் இருக்கும் யார் பரப்பினாலும் அவருடன் சேர்த்து, அட்மினையும் கைது செய்கிறார்கள். 

யாரும் புகார் அளிக்காதவரை பிரச்னையில்லை. 

மாறாக, யாரேனும் உங்கள் மீது புகார் அளித்தால், நிச்சயம் வம்புதான். 

இப்படி இந்த அட்மின்கள் விஷயத்தில் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன.

எனவே வெறுமனே வாட்ஸ்அப் அட்மினாக இருப்பதில் யாருக்கும் எந்தச் சிக்கலும் இல்லை; 

ஆனால், உங்கள் க்ரூப்பில் இருப்பவர்கள் மேற்கண்ட உதாரணங்கள் போல தவறான விஷயங்களில் தலையிட்டால் காவல்துறை மோப்பம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்; 

அதுபோன்ற சிக்கல்களில் மட்டும் தலையைக் கொடுக்காமல் இருந்தாலே போதும். அட்மின்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை!


Source - https://bit.ly/2wfOV7g

சனி, 5 மே, 2018

மரணம் ஒரு புதிர்.

புதிர்கள் எப்போதும் உனக்கு பயத்தையே அளிக்கின்றன..

"வாழ்வின் மீதான பயத்தினாலும் மரணத்தின் மீதான பீதியினாலுமே நீ கடவுளை வணங்குகிறாய்;

அன்பினால் அல்ல.

மரணத்தைக் குறித்துக்கூட நீ பீதி கொள்வதில்லை.

இந்த உலக வாழ்வின் மீதான பற்றுதலைக் குறித்தே பீதி கொள்கிறாய்.

சொத்து சுகங்களையும், சொந்த பந்தங்களையும் பிரிய வேண்டுமே என்ற பீதி.

பற்றை அறு;

“இழப்பதற்கு ஏதுமற்றவனாக இரு;"

- தேகம் நூலில் இருந்து..