வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

மயக்கமா கலக்கமா..?

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

உந்தன்  மனதை மாளிகை ஆக்கி
இரவும் பகலும் பிரார்த்தனையோடு

நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு


உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்து பார்த்து நிம்மதி நாடு


பாடலை கேட்க 👇 கீழ்கானும் தலைப்பை சொடுக்கவும்.

-மயக்கமா கலக்கமா பாடல்

ஞாயிறு, 2 ஜூன், 2019

ஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம்


‘ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும்.

ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும்.

‘ஸகாத்துல் பித்ரை’ அனைத்து மனிதர்கள் மீதும் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.

‘ஸாஉ’ என்பது நடுத்தரமான ஒரு மனிதரின் கைகளால் நான்கு அள்ளு அள்ளி வழங்குவதைக் குறிக்கும்.
இது அரபுகளிடம் காணப்பட்ட ஒரு அளவீட்டு முறையாகும்.
சாதாரணமாக அரிசி என்றால், ஒரு ‘ஸாஉ’ என்பது 2.3 kg. ஐக் குறிக்கும் என்பர்.

உதாரணமாக, ஒருவரிடம் மூன்று பிள்ளைகள், ஒரு மனைவி இருக்க, அவரது பொறுப்பில் அவரது பெற்றோர்களுமிருந்தால் தனது மூன்று பிள்ளைகள், தான், தனது மனைவி, பெற்றோர் இருவரும் என மொத்தமாக ஏழு பேர்களுக்காக ஏழு ‘ஸாஉ’ உணவு வழங்க வேண்டும்.

எனவே, இந்த ஸகாத் அனைவர் மீதும் விதியாகின்றது!

‘யார் பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதை வழங்கினாரோ, அது ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘ஸகாத்’தாகும்.
யார் தொழுகைக்குப் பின்னர் அதை வழங்கினாரோ அது (சாதாரணமாக) வழங்கப்பட்ட ஒரு தர்மமாகக் கணிக்கப்படும்.

பெருநாளைக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர், இதனை வழங்குபவராக இப்னு உமர்(ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

‘ஸகாதுல் பித்ரா’வாக ஒரு ‘ஸாஉ’ உணவுக்கான பணத்தை வழங்க முடியுமா? என்ற விசயத்தில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிகழ்கின்றது.

பெரும்பாலான அறிஞர்கள் உணவுப் பொருளையே வழங்க வேண்டும் என்கின்றனர்.

இது ஒரு இபாதத்தாக இருப்பதால் இபாதத்தை ஏவப்பட்ட விதத்தில் பகுத்தறிவுக்கு இடம் கொடுக்காமல் செய்வது தான் சரியானது என்ற அடிப்படையில் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.

பணத்தையும் ‘பித்ரா’வாக வழங்கலாம் எனக்கூறுவோர் ஏழைகளுக்கு இது நன்மையாக அமையும் என்ற காரணத்தைக் கூறி இதை ஆமோதிக்கினறனர்.
இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள் இக்கருத்தைக் கொண்டுள்ளார்.
இதில் முதல் கருத்தே மிகவும் பொருத்தமானதாகத் திகழ்கின்றது.

ஒரு ஆட்டை அல்லது மாட்டை ஸகாத் 
கொடுக்கவேண்டும் எனும் போது, அதன் பெறுமதியைக் கொடுப்பது கூடாது என்பது போல், இதுவும் கூடாது என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். 


-அல்லாஹ்வே மிக அறிந்தவன்-

நன்றி: உண்மை உதயம் மாதஇதழ் 2007



திங்கள், 25 ஜூன், 2018

தகராறு என்ற சொல்...

ஆடுகள் இரண்டு எதிரெதிரே வரும்போது விலகி வழிகொடுக்காது;

இரு ஆடுகளுமே வழிவிடாத நிலையில் மோதல் ஏற்படும்;

இரண்டுமே தலைகளால் முட்டிக் கொள்ளும்.

இதையே தமிழர்கள் தகராறு எனக் குறிப்பிட ஆரம்பித்தனர்.

தமிழில் ஆட்டை தகர் என்றனர்.

ஆறு என்றால் வழி.

தகராறு என்றால் தகரின் ஆறு.

ஆட்டின் வழி தகராறு

அதிலிருந்து பிறந்த சொல்தான் தகராறு.

செம்மறியாடுகள் வெள்ளாடுகளைவிட அறிவு குறைந்தவை.

மேயும் செம்மறியாடுகள் எதிரில் சிறு கால்வாய் வருமாயின் அவை அதைத் தாண்டாது நிற்கும்.

இதற்காகவே இடையர்கள் செம்மறியாடுகளிடையே இரு வெள்ளாடுகளை மந்தையில் சேர்த்திருப்பார்கள்.

வெள்ளாடுகள் கால்வாயைத் தாண்டிவிடும். அதைப் பார்த்துச் செம்மறியாடுகளும் தாண்டும்.

ஆடுகளை மேய்ப்பவர்கள் இயற்கை அறிவை அதிகமாகப் பெற்றிருப்பர். காடு கழனிகள், தோட்டந்துரவுகள் போன்றவற்றில் அறிவுகளைப் பெற்றிருப்பதைப்போல விண்வெளியைப் பற்றிய அறிவுகளையும் அதிகம் பெற்றிருப்பர்.

மாக்களை மேய்க்கும் திறமை பெற்றவர்கள் மக்களை மேய்க்கும் திறமையில் வலுவானவர்களாக இருப்பார்கள் என்பதாலோ, இறைத்தூதர்களில் பலர் நல்ல மேய்ப்பர்களாக இருந்திருக்கிறார்கள்.

இபுறாகீம் நபிகளாரிடமிருந்து ஈஸா நபி வரை பலரும் ஆடு மேய்த்தலைத் தொழிலாகக் கொண்டவர்களே!

அவர்களைப் போலவே சிறுவயதில் முஹம்மது நபியவர்களும் ஆடு மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார்.


நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு
என்ற புத்தகத்தில் ..

- தாழைமதியவன்

திங்கள், 18 ஜூன், 2018

நபிகள் நாயகம்

இஸ்லாத்தைப் பலரும் மதமாகவே எண்ணுகின்றனர்.

அது அகம்,புறம் இரண்டையும் வழி நடத்திச் செல்லக்கூடிய மார்க்கமென அறிந்தார் இல்லை.

அண்ணலாரையும் ஒரு மத நிறுவனராகவே கருதுகின்றனர்.

அவர் கடந்த கால சமுதாயத் தலைவர் என்பதையோ நிகழ்கால வாழ்வியலைச் செம்மையாக்கியவர் என்பதையோ வருங்கால மக்களுக்குரிய மகத்தான வழியை வகுத்துத் தந்தவர் என்பதையோ
புரிந்தார் இல்லை.

அண்ணலாரைப் பற்றியும் அவர்கள் மூலம் அளிக்கப்பட்ட திருக்குர்ஆன் கருத்துகள் பற்றியும் ஒவ்வொரு முஸ்லிமும் சுருக்கமாக மாற்றுமதச் சகோதரரிடம் சொல்லியிருந்தால் ‘இஸ்லாமியச் சித்திரம்’ அனைவரிடமும் தெளிவாக காணக்கிடைத்திருக்கும்.

அந்தப் பெருங்குறையை நீக்கினால்தான் ‘இஸ்லாம்’ எனில் சாந்தி என்பதும் அது கூறுவது ‘சரணாகதி தத்துவம்’ என்பதும் புரியும்.

ஆன்மிகத் தலைவர் முதல் அரசியல் தலைவர் வரையுள்ள பலரிடம் நாம் பின்பற்றக்கூடிய முன்மாதிரிகள் முழுமையாக இருக்காது.

ஆனால் அண்ணலாரின் அக புற வாழ்க்கையில் முன்மாதிரிகள் அனைத்தும் இருக்கக் காணலாம்.

அவை நாம் பின்பற்றக்கூடிய முன்மாதிரிகளாக இருப்பதால் அண்ணலாரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும்.

நபிகளாரின் வாழ்வை வாசித்தறிந்தால்
நம் வளமான வாழ்க்கைக்கு உரமாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.


திங்கள், 11 ஜூன், 2018

பெற்றோர்களுக்காக ..

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் .

சிறுவர்களை நல்ல பண்புகளுடனும் , பழக்கவழக்கத்துடனும் , பாசத்துடன் அன்பையும் காட்டி பெற்றோர்கள் வளர்க்க வேண்டியது அவசியம்.

இளம் வயதிலேயே சிறந்த அறிவுள்ள புத்திசாலியான பிள்ளையாக அவர்களை வளர்த்து இந்த உலகில் அவனும் ஒரு சிறந்த தலைமகனாக மிளிர வேண்டும் .

இளம் வயதில் கல்வி அறிவின்றி வளரும் சிறுவர்கள் பெரியவர்களானதும் இந்த உலகில் கவனிப்பார் யாரும் அற்று ஒரு அடிமைத்தனுத்துக்குள் சிக்கி கொள்கிறார்கள்.

பெற்றோர்கள் தமது கஷ்டங்களை பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

ஆடம்பரமான வாழ்க்கை வாழும் போது அவர்களுக்கு கஷ்ட, துன்பங்கள் தெரியாது வளருகிறார்கள்.

ஒரு சிறுவன் நல்லவன் ஆவதும் கெட்டவன் ஆவதும் அவனது பெற்றோர் மற்றும் அவனிருக்கும் சூழல் என்பன காரணிகள் ஆகின்றன.

எனவே சிறுவர்களிடம் பேசி கத்துவதை விட அன்பால் அவர்களை திருத்த முயலுங்கள்.

எதனையும் அன்பாக , ஆறுதலாக சொல்லி பாருங்கள் .

அன்பால் முடியாதது ஒன்றும் இல்லை . 


அஸ்ஸலாமு அலைக்கும்.

திங்கள், 7 மே, 2018

பழங்கள் திண்ணும் நீரிழிவு நோயாளிகளுக்கு , நீரிழிவு முற்றி அதனால் கீட்டோ அசிடோசிஸ் நிகழ்ந்து மரணம் சம்பவிக்கும்.

பழங்கள் தின்றாலும் சர்க்கரை கூடவே செய்யும்..

இந்த அடிப்படை அறிவை நீரிழிவு வந்த யாரும் சோதிக்க முடியும்.

உங்கள் நீரிழிவு மாத்திரைகளை ஒருநாள் முழுவதும் நிறுத்திவிட்டு ஒரு மாம்பழம் சாப்பிட்டுவிட்டு உங்கள் ரத்த சர்க்கரை அளவை சோதித்து பாரும்..

உங்களுக்கு அதை சோதித்து உண்மையை அறிந்து பிறகு பரப்பவும்.

தீர ஆராய்வது உங்கள் பொறுப்பு..

- Dr.ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை

Source - https://bit.ly/2JX0ouz

ஞாயிறு, 6 மே, 2018

வாட்ஸ்அப் அட்மின்கள் கைது செய்யப்படுவது ஏன்?

கடந்த இரண்டு வருடங்களாகவே 'வாட்ஸ்அப் அட்மின் கைது' என்பது போன்ற செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில் காணலாம். 

அப்படிக் கைதாகும் பெரும்பாலான அட்மின்களின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, அவர்களின் க்ரூப்களில் தவறான தகவல்கள் பரவியது என்பதுதான். 

அவ்வப்போது வரும் இதுபோன்ற செய்திகள் பெரும் சலனத்தை ஏற்படுத்தாவிட்டாலும், இன்று வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் அனைவருமே கவனிப்பதற்கு இதில் ஒரு விஷயம் உண்டு. 

ஒரு அட்மின் கைதாவதற்கு அவரே பொய்யான தகவல்களை, சட்ட விரோத தகவல்களைப் பரப்பவேண்டும் என்பதில்லை. 

அவரின் க்ரூப்பில் இருக்கும் யார் பரப்பினாலும் அவருடன் சேர்த்து, அட்மினையும் கைது செய்கிறார்கள். 

யாரும் புகார் அளிக்காதவரை பிரச்னையில்லை. 

மாறாக, யாரேனும் உங்கள் மீது புகார் அளித்தால், நிச்சயம் வம்புதான். 

இப்படி இந்த அட்மின்கள் விஷயத்தில் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன.

எனவே வெறுமனே வாட்ஸ்அப் அட்மினாக இருப்பதில் யாருக்கும் எந்தச் சிக்கலும் இல்லை; 

ஆனால், உங்கள் க்ரூப்பில் இருப்பவர்கள் மேற்கண்ட உதாரணங்கள் போல தவறான விஷயங்களில் தலையிட்டால் காவல்துறை மோப்பம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்; 

அதுபோன்ற சிக்கல்களில் மட்டும் தலையைக் கொடுக்காமல் இருந்தாலே போதும். அட்மின்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை!


Source - https://bit.ly/2wfOV7g